tamilnadu

img

தர்காவில் கிருமி நாசினி தெளிக்க இமாம் எதிர்ப்பு....

லக்னோ:
ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியால் தர்காவை சுத்தம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஆலா ஹசரத் என்ற தர்கா அமைந்துள்ளது. கொரோனாவால் மூடப்பட்டிருந்த இந்த தர்காவை திறக்க நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழிபாட்டுத் தலங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாகும். இந்நிலையில்தான், பரேலி தர்காவில் கிருமிநாசினி தெளிக்க அனுமதி இமாம் அனுமதி மறுத்துள்ளார்.

“போதை தரும் ஆல்கஹாலை பயன்படுத்த இஸ்லாத்தில் தடை உள்ளது. எனவே ஆல்கஹால் கலந்து தயாரிக்கப் பட்ட கிருமிநாசினிகளை முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடாது. இதை நன்கு அறிந்த பின்னும் மசூதி, தர்காக்களில் பயன்படுத்துவது இஸ்லாத்தில் குற்றமாகும். எனவே, ஆல்கஹால் கலக்காத கிருமிநாசினிகளை பயன்படுத்து மாறு கோரியுள்ளேன்” என்று தர்காவைச் சேர்ந்த இமாம் முப்தி நஷ் தர் பரூக்கீ கூறியுள்ளார்.மத்தியப்பிரதேச மாநிலம் போபாலிலுள்ள மா வைஷ் ணோவதம் நவ் துர்கா கோயிலின் தலைமை அர்ச்சகர் சந்திரசேகர் திவாரி என்பவரும் முன்புகிருமி நாசினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதேபோல மதுரா கிருஷ்ணன் கோயில், இஸ்கான், பாங்கேபிஹாரி உள்ளிட்ட கோயில்களிலும் கிருமிநாசினிக்கு எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

;